This was a guest post by my uncle செ. தங்கபிரகாஷ்.
நண்பர்களே, "பரதேசி" படத்தின் பாடல்களை கேட்டீர்களா? இல்லை என்றால் தயவு செய்து கேட்டகவும். பாடல்கள் அனைத்தும் மிக மிக அருமை. அதுவும் குறிப்பாக "சென்நீர்தானா.....", "செங்காடு..." பாடல்கள் மனதை உருக்கும் வரிகள் மற்றும் இசை.
1900 களின் ஆரம்ப மற்றும் மத்தியில் தமிழகத்தில் நடந்த இந்த வரலாற்று நிகழ்வுகளை (கரு: "எரியும் பனிக்காடு" நாவல் ) அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது "பரதேசி" படம் (பட முன்னோட்டத்தில் இருந்து அறிந்துகொண்டது). அன்று,சொந்த ஊரை விட்டு வேறு ஊருக்கு பிழைக்க போவது எனபது ஒன்றும் சாதாரண விசயம் அல்ல.
இன்று படித்தவர்கள் நாடு விட்டு நாடு போவது போல் அல்ல அதில் உள்ள விசயங்கள். அன்றைய படிக்காத மக்களுக்கு தனது பிறந்த ஊரும், தான் சிறு வயதில் விளையாண்ட தெருவும், காடுகளும், கள்ளி செடிகளும், ஆற்றங்கரைகளும் அவர்களின் எழுதப்படாத சொத்தாக மனதில் தேங்கி நிற்பவை. சிறிதோ பெரிதோ, துன்பமென்றால் எந்த சொந்தம் ஆறுதல் சொன்னாலும் இளகாத மனது இந்த இடங்களில் சென்று இளைப்பாறும் போது வருமே ஒரு தாலாட்டும் உணர்வு.. ஒரு இனம் புரியாத நிம்மதி... அதில் உள்ளது பிறந்த ஊரின் பெருமை.. வளர்ந்த இடத்தின் மகிமை...
1940 களில் வறுமை தொற்றிப்போன கிராமங்களில் வாழ்ந்த வெறுமையை வாழ்க்கையாக கொண்ட பாவப்பட்ட மக்கள், சொந்த மண்ணில் சாவதை விட வேறு மண்ணில் கூலி செய்தேனும் அரை வயிற்று கஞ்சி சேர்த்து தம் மனைவி மக்களை காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் கண்காணிகளின் கபட பேச்சுகளை நம்பி கூட்டம் கூட்டமாக மலை பகுதுயில் உள்ள தேயிலை தோட்டங்களில் வேலைக்கு சென்றார்கள். பிடுங்கி தம்மையே தின்னும் வறுமை ஒரு புறம்... "ஆண்டை" என்னும் எழுதப்படாத அதிகார மக்களின் அடிமைகலாக வெட்கம், மானம், ரோசம் ஏன்... மனிதத்தையே காலம் காலமாக அடகு வைக்கும் வாழ்க்கை முறை மறுபக்கம்.. பாவம் தோய்ந்த, ஏழைப்பட்ட மனிதன் மனதை மரமாக்கி துணிந்து முடிவெடுக்கிறான் பரதேசம் போவதென்று.. இது அவன் தன்னை, தன் கனவுகளை அழித்து தனது சந்ததி காத்திட அதன் வாழ்க்கை நிலை உயர்ந்திட எடுத்திட்ட ஒரு உன்னத முடிவு... ஆனால் அவர்கள் வாழ்கை அல்லது அவர் சந்ததியின் வாழ்க்கை மேம்பட்டதா? கண்டிப்பாக இல்லை..... அங்கு அவர்கள் அடிமைகளை விட மிக மோசமாக நடதப்பட்டர்கள். சரியான வசதிகள் இல்லை, முறையான மருத்துவம் இல்லை, சுகாதாரம் சுத்தமாக இல்லை தீர்க்கமாக கூறுவதென்றால் விலங்குகளை விட கேவலமாக நடத்தப்பட்டார்கள் நம் இன தமிழ் மக்கள்.. புறப்பட்டவர் "பலர்", சென்றடைந்தவர் "சிலர்", அதில் வாழ்ந்தவர் "மிக சிலர்" மட்டுமே...அந்த பாவப்பட்ட மனிதர்களின் உணர்வுகளை மிக அழகாக சொல்லி இருக்கிறார்கள் அருமையான இசையில் மிக ஆழமான வரிகளுடன்.
இந்த மக்களின் துயர் பட்ட கிராம வாழ்க்கை மற்றும் இடம் பெயர்ந்த பிறகான வாழ்க்கை முறை அவர் பட்ட இன்னல்கள் பற்றி மேலும் அறிந்திட மருத்துவர் டேனியல் இன் "எரியும் பனிக்காடு" நாவல் படிக்கவும். டேனியல் அவர்கள் இந்த பாவப்பட்ட மனிதர்களின் மருத்துவராக பணியாற்றியவர். அவரின் சொந்த கண்ணால் பார்த்த பதிவுகளே இந்த நாவல் .எனக்கு மிகவும் பிடித்த இந்திய நாவல்கல் வரிசையில் என்றும் முதல் இடத்தில இருப்பது இந்த "எறியும் பனிக்காடு" (Red Tea) நாவல். இந்த நாவலை படியுங்கள் பிறகு ஊட்டி, கொடைக்கானல், வால்பாறை சுற்றுலா செல்லுங்கள்... உங்கள் உள்ளத்தில் ஏற்படும் மாற்றத்தை உணருங்கள். இந்த நாவலை படித்து நான்கு வருடங்களுக்கு மேல் ஆகிறது.. ஆனால் அதன் தாக்கம் இன்றும் நெஞ்சை விட்டு அகலவில்லை..
கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு நன்றிகள் மிக பல. அற்ப்புதமான வரிகள்.. அழ வைக்கும் கருத்துகள்...
நன்றி கவிஞரே..
இந்த அதீத முயர்ச்சிக்காக இயக்குனர் "பாலா" வுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
மனதை உருக்கும் இசை வழங்கிய "G. V. Prakashkumar" க்கும் நன்றிகள்.
வாழ்த்துக்களுடன்,
செ. தங்கபிரகாஷ்







